ETV Bharat / state

'திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள்.. திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது': முதலமைச்சர் - திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது

'திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது' என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத்திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.

cm-stalin-says-only-those-who-wanted-to-destroy-dmk-have-perished திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்கள்.. திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது - ஸ்டாலின்
திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்கள்.. திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது - ஸ்டாலின்
author img

By

Published : Jun 23, 2022, 3:35 PM IST

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் பேத்தி தீப்தி - விஷ்வக்சேனா ஆகியோரின் திருமணத்தைத் தலைமையேற்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார்.

அதன் பின் திருமண விழாவில் பேசும் போது, "இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டுத்திருமணம் நடப்பதைப்போல எண்ணி நாமெல்லாம் கலந்துகொண்டு, இந்த நிகழ்ச்சியில் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் - திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களின் பெயர்த்தி தீப்தி - விஷ்வக்சேனா திருமண விழா

அந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் போக விரும்பவில்லை. இது நம்முடைய வீட்டுத் திருமணம். அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவர்கள்தான் நம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறார்களாம். திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது.

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்ல  திருமண விழா

எனவே, அந்த உணர்வோடு நாம் இருக்கிறோம். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவர் இருக்கிற இடத்தில் எப்போதும் விசுவாசமாக - நன்றி உணர்வோடு இருந்து பணியாற்றுபவர் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அவர் எம்ஜிஆருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்.

திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்கள்.. திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது - ஸ்டாலின்

அதைத்தொடர்ந்து தலைவர் கருணாநிதி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இன்றைக்கு என்னுடைய தலைமையில் அமைந்திருக்கும் அமைச்சரவையிலும் அமைச்சராக இருக்கிறார் என்றால், எந்த அளவிற்கு அவர் பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு - கடமையாற்றி கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு.. அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன ??

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.