ETV Bharat / state

'நீட் விலக்கு; ஆளுநர் ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம்' - நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் போக்கு மாநில உரிமையை கேள்விக்குறியாக்கி உள்ளது முதலமைச்சர் ஸ்டாலின்

சட்டத்தை இயற்றக்கூடிய அதிகாரம் இருக்கும் சட்டப்பேரவையில் ஒரு சட்டம் (நீட் விலக்கு மசோதா) இயற்றி அனுப்பும்போது அதனை ஆளுநர்கள் மதித்து, ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம். எனவே இதை ஆளுநரை நேரில் சந்தித்து நான் வலியுறுத்தினேன். ஆனாலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் போக்கு மாநில உரிமையை கேள்விக்குறியாக்கி உள்ளது முதலமைச்சர்  ஸ்டாலின்

author img

By

Published : Jan 8, 2022, 3:19 PM IST

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் இருக்கும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக விவாதிக்க சட்டப்பேரவைத் தலைவர்கள் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட 13 கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கல்வி வளர்ச்சிக்குத் தடை

இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், "ஏழை-எளிய, விளிம்புநிலை மக்கள் வாழும் நாட்டில், வறுமை சூழ்ந்த நாட்டில் சமத்துவமற்றத் தன்மை இருக்கும்பட்சத்தில் கல்வியை அனைவரும் அடைய வேண்டும் என்பது பெரிய சிரமமான காரியமாக உள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்
நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டம்

அந்த ரத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. ஏன் உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்றது. அப்படிப்பட்ட அந்தக் கல்வி உரிமையை இந்த நீட் தேர்வு பறிக்கிறது. தமிழ்நாடு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடை போடும் இந்த நீட் தேர்வை நாம் அனைவரும் தொடர்ந்து எதிர்த்துவருகிறோம்.

இது சமூக அநீதி அல்லவா?

12ஆம் வகுப்பில் கற்ற கல்வியைவிட மேலானதாக நீட் என்னும் இரண்டு மணிநேர தேர்வு இருப்பதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், இது சமூக அநீதி அல்லவா? லட்சக்கணக்கில் பணம் செலுத்தி எத்தனை பேர் நீட் தேர்வுக்கான பயிற்சியைப் பெற முடியும். அதனால்தான் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதலாவதாகப் பிரதமரைச் சந்தித்து நீட் தேர்விற்குத் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தோம்.

நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வலியுறுத்தியுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் நீட் ரத்து மசோதாவைக் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது நிறைவேற்றினோம். மேலும், அப்படி நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தோம்.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்

சட்டமியற்றும் அதிகாரமும் கேள்விக்குறியாகும் சூழல்

ஆனால், அந்தச் சட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமலே வைத்திருக்கிறார் ஆளுநர். ஒரு சட்டத்தை இயற்றக்கூடிய அதிகாரம் இருக்கும் சட்டப்பேரவையில் ஒரு சட்டம் இயற்றி அனுப்பும்போது அதனை ஆளுநர்கள் மதித்து, ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம்.

எனவே இதை ஆளுநரை நேரில் சந்தித்து நான் வலியுறுத்தினேன். ஆனாலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை.

மாநில உரிமையையும், சட்டப்பேரவையில் சட்டமியற்றும் அதிகாரமும் கேள்விக்குறியாகும் சூழல் உருவானதால்தான் அவசரமாக, அவசியமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி உள்ளோம். இந்தக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஒரு வரைவுத் தீர்மானத்தை எடுத்துரைத்துக்கவுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்

நாம் அனைவரும் இணைந்து இந்த நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். எனவே இந்தக் கூட்டத்தில் உங்களுடைய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க : 'நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'- மு.க. ஸ்டாலின்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.