ETV Bharat / state

காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்போர்வை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர்!

author img

By

Published : Jun 5, 2022, 4:33 PM IST

கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் 127ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர்போர்வை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் மரியாதை
முதலமைச்சர் மரியாதை

சென்னை: காயிதே மில்லத் 127ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன் 5) சென்னை திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்து மரியாதை செலுத்தினர்.

முதலமைச்சர் ட்விட்
முதலமைச்சர் ட்வீட்

பின்னர் தன் ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ’இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழி, மத நல்லிணக்கம், சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சி எனத் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியச் சிறுபான்மையினருக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழும் 'கண்ணியத் தென்றல்' காயிதே மில்லத் பிறந்தநாளில் அவர்தம் தொண்டை நினைவுகூர்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: செடியை வைத்து அப்துல் கலாம், விவேக் படங்களை வரைந்த ஆசிரியர் செல்வம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.