ETV Bharat / state

மனிதநேயம் பற்றி பேசிய சிறுவன், பெரியார் நாடகத்தில் நடித்த சிறுவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு! - மனித நேயம் பற்ற பேசிய சிறுவனின் வைரல் வீடியோ

மனிதநேயம் பற்றி பேசிய சிறுவன், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்த சிறுவர்கள் ஆகியோரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டி, பரிசுகள் வழங்கினார்.

மனித நேயம் பற்ற பேசிய சிறுவன்
மனித நேயம் பற்ற பேசிய சிறுவன்
author img

By

Published : Feb 24, 2022, 5:58 PM IST

Updated : Feb 24, 2022, 8:04 PM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்த மாணவர் வருண், ஒரு நிமிடத்தில் 42 புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர் பெயரைச் சொல்லி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த மாணவனின் நினைவாற்றல் திறனைப் பாராட்டும் விதமாக அம்மாணவனை தலைமைச்செயலகத்திற்கு அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

சிறுவர்களுடன் முதலைமச்சர் ஸ்டாலின்
சிறுவர்களுடன் முதலைமச்சர் ஸ்டாலின்

மேலும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்று குறவன், குறத்தி மற்றும் தந்தை பெரியார் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவர்களை முதலமைச்சர் நேரில் அழைத்துப் பாராட்டினார். தந்தை பெரியார் கருத்துகளை சிறுவன் கூறும் வகையில் அமைந்த அந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது. சமூக வலைதளங்களிலும் அதிகமாகப் பகிரப்பட்டது.

முதலைமச்சர் ஸ்டாலினுடன் சந்திப்பு

ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் அப்துல் கலாம், கடந்த சில நாள்களுக்கு முன்பு மனிதநேயம் குறித்து பேசிய காணொலி வைரலானது. இந்த சிறுவயதிலேயே இவ்வளவு பக்குவமாக, அறிவாற்றலோடு பேசுவதாகப் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்திருந்தனர். இவரையும் முதலமைச்சர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

முதலைமச்சர் ஸ்டாலினுடன் சந்திப்பு
முதலைமச்சர் ஸ்டாலினுடன் சந்திப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் சிறுவர்களுக்கு சாக்லெட் மற்றும் தனது கையெழுத்துயிடப்பட்ட புத்தகம், திருவள்ளுவர் சிலையைப் பரிசாக வழங்கினார். முதலமைச்சரிடம் பாராட்டு மற்றும் பரிசு பெற்ற சிறுவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முதலைமச்சர் ஸ்டாலினுடன் சந்திப்பு
முதலைமச்சர் ஸ்டாலினுடன் சந்திப்பு

இதையும் படிங்க: Watch: தமிழ்நாடு எங்கும் வலிமைக் கொண்டாட்டம்...!

Last Updated : Feb 24, 2022, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.