ETV Bharat / state

ரூ.250 கோடி உயர்தர பன்னோக்கு மருத்துவமனை - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்

கிண்டியில் 250 கோடி ரூபாய் மதிப்பில் உயர்தர பன்னோக்கு மருத்துவமனை கட்டிடத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

multipurpose hospital in chennai  CM Stalin laid the foundation stone for multipurpose hospital  guindy multipurpose hospital  உயர்தர பன்னோக்கு மருத்துவமனை  உயர்தர பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா  மு க ஸ்டாலின்  உயர்தர பன்னோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்

author img

By

Published : Mar 21, 2022, 11:51 AM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கிண்டியிலுள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்துக்கொண்டனர்.

உயர்தர பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டல்

கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், ஏற்கனவே சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துமனை உள்ளது. தற்போது, மேலும் 4 ஏக்கர் பரப்பில், 6 தளங்களுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதில், 200 கோடி ரூபாயில் கட்டுமான பணிகளும், மீதமுள்ள 50 கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன.

இதையும் படிங்க: நான் கூறியதை தற்போது வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.. உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.