சென்னை: பெரியார் திடலில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று இரவு (மே.17) நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.ராஜூ எழுதியுள்ள "The Dalit Truth" புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
விழாவில் பேசிய அவர்,""The dalit truth" என்ற இந்த ஆங்கிலப் புத்தகம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் இருக்கக்கூடிய தலைப்புகளை ஒவ்வொன்றாய்ப் படித்துப் பார்த்தாலே தெரியும். சுகதேவ தோரட் முதல் புத்திதி ராஜசேகர் வரை கல்வியாளர்கள் இளம் அரசியல் தலைவர், சிறந்த நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள், சமூக சிந்தனைமிக்க திரைப்பட இயக்குநர் என 13 பேரின் கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் அடங்கி இருக்கிறது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 16 விழுக்காட்டில் இருந்து முதன் முதலில் 18 விழுக்காடாக 1971-ஆம் ஆண்டு திமுக தலைமையில் அமைந்த ஆட்சிதான் நிறைவேற்றிக் கொடுத்தது என்பது தெரியும். தமிழ்நாட்டைச் சார்ந்த திரைப்பட இயக்குநர் ரஞ்சித் இந்தியாவில் தலித் சினிமா என்ற கட்டுரையில், சமூக ஆதிக்கங்களுக்கு எதிராகத் திராவிட இயக்கத் திரைப்படங்கள் அமைந்திருந்ததை அவர் இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை வென்றே தீர்வது என உருவான இயக்கம்தான் திராவிட இயக்கம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புரட்சிகர முற்போக்குக் கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவும், திரைத்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவர இருக்கிறது. நேற்று முன்தினம் அந்தப் படத்தை எனக்குப் போட்டுக் காண்பித்தார்கள். அந்தப் படத்தை நான் பார்த்தேன்.
பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் குறித்துப் பேசப்பட்டுள்ளது. மதவாத ஆதிக்க சக்திகளை எதிர்க்க இந்தக் காலத்திலே நமது உரிமைகளை உரக்கப் பேசும் பகுத்தறிவுக் கருத்துக்கள் நிரம்பிய திரைப்படங்களைத் திரைத்துறையினர் எடுக்க வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக இந்தப் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், படைப்பாளிகள் எனச் சமூகத்தின் அனைத்து அங்கத்தினரும் அரசியல் சட்டத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது எனது அரசல்ல, நமக்கான அரசு என்று நான் தொடர்ந்து அடிக்கடி எடுத்துச் சொல்வது உண்டு. அனைத்து மக்களுடைய வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய அரசு நமது அரசு.
ஆறாவது முறையாகத் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு, பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளைக் காப்பாற்றக்கூடிய அரசு. சுருங்கச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இது திராவிட மாடல் அரசு. அந்த வகையில் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருக்கிறபோதெல்லாம் அம்பேத்கருடைய கனவு செயல்வடிவத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
-
பட்டியலின - பழங்குடியின மக்களின் வலிகளையும், உரிமைகளையும் கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ள #TheDalitTruth நூலை வெளியிட்டேன்.
— M.K.Stalin (@mkstalin) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
முன்னாள் IAS K.ராஜூ அவர்கள் தொகுத்துள்ள இப்புத்தகம் காலத்தின் தேவை!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் நலனையும் காக்கும் அரணாக திமுக என்றென்றும் திகழும்! pic.twitter.com/FD6uJTfzVp
">பட்டியலின - பழங்குடியின மக்களின் வலிகளையும், உரிமைகளையும் கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ள #TheDalitTruth நூலை வெளியிட்டேன்.
— M.K.Stalin (@mkstalin) May 17, 2022
முன்னாள் IAS K.ராஜூ அவர்கள் தொகுத்துள்ள இப்புத்தகம் காலத்தின் தேவை!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் நலனையும் காக்கும் அரணாக திமுக என்றென்றும் திகழும்! pic.twitter.com/FD6uJTfzVpபட்டியலின - பழங்குடியின மக்களின் வலிகளையும், உரிமைகளையும் கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ள #TheDalitTruth நூலை வெளியிட்டேன்.
— M.K.Stalin (@mkstalin) May 17, 2022
முன்னாள் IAS K.ராஜூ அவர்கள் தொகுத்துள்ள இப்புத்தகம் காலத்தின் தேவை!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் நலனையும் காக்கும் அரணாக திமுக என்றென்றும் திகழும்! pic.twitter.com/FD6uJTfzVp
நான் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டுவதைப் போல, நம் நாடு வளர, நம் மாநிலம் வளர வேண்டும். நம் மாநிலம் வளர வேண்டும் என்றால் ஒவ்வொரு மாவட்டமும் வளர்ந்தாக வேண்டும். நம் மாவட்டங்கள் வளர, ஒவ்வொரு கிராமமும் சமூக நீதிப் பூங்காவாக, சமத்துவப் பூங்காவாக மாற வேண்டும். அப்போதுதான் உலகத்தின் நம்பர் ஒன் வல்லரசாக, அதற்கும் மேலாக ஒரு நல்லரசாக இந்தியா மாறும்" என்று கூறினார்.
இதில் நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் சட்டப்பேரவைக் குழு தலைவர் சிந்தனைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உயர்கல்விக்கு பொற்காலத்தை அளிக்கும் அரசு திமுக - மு.க. ஸ்டாலின்