ETV Bharat / state

‘தமிழ்நாடு அரசிதழில் இன்றே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் வெளியிடப்படும்’ - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! - தமிழ்நாடு அரசிதழ்

தமிழ்நாடு அரசிதழில் இன்றே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் வெளியிடப்படும் என முதலமைச்ச ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 10, 2023, 8:55 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இன்று ( ஏப்.10 ) மாலை ஒப்புதல் அளித்துள்ளார். இனி ஆன்லைனில் ரம்மி விளையாடினால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேரவையில் இன்று ( ஏப்.10 ) ஆன்லைன் ரம்மி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், “இன்று காலை நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசினர் தனி தீர்மானத்தின், ஆன்லைன் தடை சட்டம் குறித்த சட்ட மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை ஆளுநர் நிறித்தி வைத்திள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் நிர்வாக இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை எடுத்துக் காட்டினோம்.

பொதுவெளியில் ஆளுநர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தும் குறிப்பிட்டு இருந்தோம். இந்த சூழ்நிலையில் இந்த மாமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் நல் விளைவாக இன்று ( ஏப்.10 ) மாலையே ஆளுநர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்ற செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த சட்டமானது தமிழ்நாடு அரசிதழில் இன்றே வெளியிடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை சபைக்கு தெரிவிக்கிறேன்” என தெரிவித்தார். மேலும், இன்று இரவு முதலே இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Online rummy: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கடந்து வந்த பாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.