ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதர்' விருது! - fide 44th chess olympiad

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அபுதாபியில் ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருதினை நேரில் வழங்கி கௌரவித்தனர்.

tamil nadu cm mk Stalin got a Man of the Award 2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதர்' விருது
author img

By

Published : Jul 29, 2023, 8:00 AM IST

சென்னை: நேற்று (ஜூலை 28) முகாம் அலுவலகத்தில், ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் பரத் சிங் சௌகான் தலைமையில் செஸ் கூட்டமைப்பினர், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான 'சிறந்த மனிதர்' என்ற விருதினை (Man of the Year Award) நேரில் வழங்கினர்.

மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட், இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில், அதுவும் பல்லவர் கால சிற்பக் கலையினை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மாமல்லபுரத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற்றது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 185க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் அதிகமான சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் 44வது செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சுமார் 114 கோடி ரூபாய் நிதி நிர்வாக ஒதுக்கீடு செய்து, போட்டி நடத்த அனுமதி கிடைத்த 4 மாத காலத்திற்குள் 44வது செஸ் போட்டிகளையும், அதன் தொடக்க மற்றும் நிறைவு விழாவினை ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக உலகமே வியக்கும் வண்ணம் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார்.

இந்த போட்டியையொட்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் செஸ் ஒலிம்பியாட் தீபம் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்கனவே உலக அளவில் பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களை கொண்டுள்ள தமிழ்நாட்டில், மேலும் பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில அளவில் சிறந்த விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர்களுடன் விளையாடவும், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை பார்வையிடவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்த போட்டியை சிறப்பாக நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து போட்டிகளில் பங்கேற்க வருகை தந்த சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கு உயர்தர நட்சத்திர விடுதிகள், தங்கும் இடத்திலிருந்து போட்டி நடைபெற்ற இடத்திற்குச் சென்று வர சிறப்பு போக்குவரத்து வசதிகள், உணவு மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி, இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் சதுரங்கப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட காரணமாக விளங்கிய முதலமைச்சருக்கு அபுதாபியில் ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் நடப்பு ஆண்டு மார்ச் 1 அன்று நடைபெற்ற Asian Chess Excellence Awards விருது வழங்கும் நிகழ்ச்சியில், 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருது (Man of the Year Award) வழங்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இந்த விருதினை ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் பரத் சிங் சௌகான் அன்றைய தினம் பெற்றுக் கொண்டார். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, ஆசிய மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னேடியாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருதினை (Man of the Year Award) வழங்கினார்கள்.

இந்நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: என்எல்சி விவகாரம்: பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.