ETV Bharat / state

கபடி களத்தில் உயிரிழந்த இளைஞர் - ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் - கபடி போட்டியில் உயிரிழந்த இளைஞர்

கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடும்போதே உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தாருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கபடி களத்தில் உயிரிழந்த இளைஞர்
கபடி களத்தில் உயிரிழந்த இளைஞர்
author img

By

Published : Jul 27, 2022, 3:40 PM IST

சென்னை: கடலூர் மாவட்டம், மானடிகுப்பம் கிராமம், தெற்குத்தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் கடந்த 24ஆம் தேதியன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற புறங்கணி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்ற விமல்ராஜ் (21) விளையாடிக்கொண்டிருந்தபோதே எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.

இதனையறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடிக்கொண்டிருந்தபோது இளைஞர் உயிரிழந்த செய்தியைக்கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த சஞ்சய் என்ற விமல்ராஜின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பண்ருட்டியில் விளையாடும்போது களத்திலேயே உயிரிழந்த கபடி வீரர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.