ETV Bharat / state

தென்னைநார் நிறுவனங்களின் கோரிக்கையை பரிசீலிக்க உயர்மட்ட நிபுணர் குழு: முதலமைச்சர்

காயர் பித் மற்றும் தென்னைநார் தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

cm-stalin-forms-high-level-committee-for-coconut-husk-factories-demand
தென்னைநார் நிறுவனங்களின் கோரிக்கையை பரிசீலிக்க உயர்மட்ட நிபுணர் குழு: முதலமைச்சர்
author img

By

Published : Jul 28, 2023, 7:39 PM IST

சென்னை: காயர் பித் மற்றும் பிற தென்னைநார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையிலிருந்து ஆரஞ்சு வகையாக மறுவகைப்படுத்தியது தொடர்பாகப் பல்வேறு தென்னை நார் தொழில் சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் அரசுக்கு பெறப்பட்டுள்ளன'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும் நீடித்த நிலைத்தன்மையினை உறுதி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு ‘தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்’ என்ற நிறுவனம் ஒன்றினை துவக்கி மதிப்புக் கூட்டப்பட்டுள்ள பொருட்கள் உற்பத்தியினை அதிகரிக்கவும் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை அதிகரிக்கவும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நம் மாநிலத்தில் உள்ள தென்னை விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் மற்றும் காயர் பித் உள்ளிட்ட தென்னை சார் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பெருமளவில் பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதுடன் மொத்தத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வேலைவாய்ப்புகளை வழங்கி வரும் இந்நிறுவனங்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு மிகுந்த கனிவுடன் பரிசீலித்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த கோரிக்கை குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, இப்பொருள் குறித்து விரிவாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இம்முயற்சி சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையிலும் அதே சமயம் இந்நிறுவனங்கள் நிலைத்தன்மையுடன் இயங்கிடவும் வழி வகுக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளார்.

உலகளவில் தென்னைநார் உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. தென்னை நார் கயிறு உற்பத்தியில் நாட்டில் தமிழகமும், தமிழகத்தில் கோவை மாவட்டமும் முதலிடத்தில் உள்ளன. தென்னைநார் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மூலமாக அந்நிய செலாவணி அதிகம் ஈட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னைநார் நிறுவனங்களின் கோரிக்கையை பரிசீலிக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தென்னைநார் நிறுவனங்களின் மேலும் வளர்ச்சி அடையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 2 மாதம் காத்திருக்க முடியாதா?; நெற்பயிர்கள் அழிப்பதை பார்த்து கண்ணீர் வந்துவிட்டது: என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்த நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.