ETV Bharat / state

ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு - தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? எதற்குத் தடை - cm Stalin Extend covid Lockdown Guidelines for tamil nadu

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், பரவி வரும் உருமாறிய கரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு பொது மக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? எதற்கு தடை விதிக்கப்படுகிறது?

author img

By

Published : Dec 31, 2021, 9:26 PM IST

Updated : Dec 31, 2021, 10:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், பண்டிகைக் காலங்களில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதிய கட்டுப்பாடுகள் - முதலமைச்சர் அறிவிப்பு

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு குறித்து அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 'ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 31.1.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கரோனா நோய்த்தொற்றுப்பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக்கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10,2022 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில்கொண்டு பொது மக்கள் நலன் கருதி கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விதித்த கட்டுப்பாடுகள்,

'புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

  • சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்குத் தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
  • மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
  • அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
  • அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும்

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரியக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். அவை,

  1. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்படும்.
  2. வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.
  3. உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
  4. பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park / Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  5. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும்.
  6. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
  7. துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்குமிகாமல் செயல்படுவதைக் கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  8. கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  9. உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  10. பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.
  11. மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
  12. திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் (Multiplex/Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
  13. திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
  14. உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
  15. அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
    ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரியக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வழிகாட்டு நெறிமுறைகள்

  • தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒமைக்ரான் வைரஸ் அதிகம் தாக்க வாய்ப்புள்ளதால் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (Hand Sanitizer with Dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (Thermal Screening).
  • கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவும் அணிவதைச் சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கவேண்டும்.
  • அனைத்து நிறுவனங்களும் குளிர் சாதன வசதியைத் தவிர்த்து, வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

  • நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
  • கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
  • வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.
  • நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
  • நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிரமாக நோய்த் தொற்றுப் பரவலை வீடு வீடாகக் கண்காணிக்கக் குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும்.
  • கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடுவார்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
  • தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருந்தாலும் தற்போது உருமாறிய கரோனா ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவி வருவதால், பொது இடங்களில் கரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதைப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்.
  • தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் கரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  • எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
  • மேலும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியினை கட்டாயம் செலுத்திக் கொள்ளுமாறும், மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இக்கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'மீண்டும் மிதக்கும் சென்னை! விடியா அரசின் அமைச்சர் ராஜினாமா செய்வாரா?'

கரோனா பாதிப்பு - கடந்துவந்த பாதை

Last Updated : Dec 31, 2021, 10:19 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.