சென்னை: மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமான தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம், முதுகுத் தண்டுவட பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (நவம்பர் 19) மரணமடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தம் வாழ்வையே தனித்தமிழ் இயக்கத்துக்காகத் ஒப்படைத்துக்கொண்டு பணியாற்றிய 'திராவிட மொழி நூல் ஞாயிறு' தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம் முதுகு தண்டுவடப் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று இரவு மறைவெய்தினார் என்ற செய்தியை அறிந்து வருந்துகிறேன்.
அவரது மறைவால் வாடும் மொழிஞாயிறு பாவாணரின் குடும்பத்தார் மற்றும் தமிழார்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'அனைத்துத்துறை கல்வெட்டுகள் ஆவணமாக்கப்படும்' - அமைச்சர் உறுதி