ETV Bharat / state

'ஆசிய கடற்கரை விளையாட்டுப்போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும்..!' - பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின்

அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டுப்போட்டிகளை சென்னையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக்கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

’ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும்..!’ - பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை

author img

By

Published : Jul 29, 2022, 6:48 PM IST

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப்போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்கக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் நடைபெற்ற 44ஆவது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும், இவ்விளையாட்டுப்போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத்தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும் தனது நன்றியை இந்தியப் பிரதமருக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் இந்தியப்பிரதமர் காட்டிவரும் ஆர்வத்தைத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதற்குரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் வேண்டுகோளையேற்று, 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப்போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு, 6-5-2022அன்று தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக்குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதைச்சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இவ்விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை (guaranteeing free passage for the participants to these games along with other guarantees) ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏற்கெனவே ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இதுதொடர்பாக 23-5-2022 அன்று கடிதம் எழுதியுள்ளதாகவும், செப்டம்பர் 2022 இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் அதனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர், இந்தியப் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை நிகழ்த்தி வருகிறோம் - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.