ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு? - chennai district news

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

cm palanisamay
cm palanisamay
author img

By

Published : Jun 24, 2020, 4:00 PM IST

தமிழ்நாட்டில் இதுவரை கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து, தமிழ்நாடு கரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்தந்த மாநில அரசுகள் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதுகுறித்து பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், முதலமைச்சர் ழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் கரோனா தடுப்பு பணி குறித்து ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது, பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லைகளை மூட முதலைமைச்சர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மண்டலங்களுக்குள் அரசுப் பேருந்துகளை இயக்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.