ETV Bharat / state

இலங்கையில் சிக்கியுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் - 36 தமிழ்நாடு மீனவர்கள் கைது

CM Palanisamy
முதலமைச்சர் பழனிசாமி
author img

By

Published : Dec 17, 2020, 8:09 PM IST

Updated : Dec 17, 2020, 10:53 PM IST

20:06 December 17

சென்னை: இலங்கை கடற்படையினரிடம் சிக்கியுள்ள 36 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த இரு நாள்களுக்கு முன்னர் கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 36 மீனவர்கள் 5 படகுகளில் மீன்பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படையினரால் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். 

இலங்கை கடற்படையினரிடம் சிக்கியுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 36 பேர் மற்றும் அவர்களது 5 படகுகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் பிரதமர் தலையிட்டு வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆசிரியர் தேர்வு முறைகேடு! - விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைப்பு!

Last Updated : Dec 17, 2020, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.