ETV Bharat / state

பெரியாறு, கோவிலாறு அணைகளில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு! - -water For Agriculture

சென்னை: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் பாசன வசதி பெறும் வகையில் பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக நவம்பர் 5ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Nov 3, 2020, 5:44 PM IST

இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று, வரும் நவம்பர் 5ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் 802.93 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.