ETV Bharat / state

'தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி ஆணையம்' முதலமைச்சர் உத்தரவு

CM order to form commission for reservation

author img

By

Published : Dec 1, 2020, 5:21 PM IST

Updated : Dec 1, 2020, 7:33 PM IST

17:20 December 01

சென்னை: தமிழ்நாட்டில் சாதிரீதியான புள்ளிவிரங்களைச் சேகரிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பல்வேறு காலகட்டங்களில் கோரிக்கைகளை வைத்துவருகின்றனர். தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்து வருகிறது. இவற்றின் பயன் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.  

மேலும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கை எதிர்கொள்ள இத்தகைய புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன" எனக் கூறப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலகட்டத்தில் உள்ள சாதி வாரியான முழுமையான புள்ளி விவரங்கள் அவசியம் என்றும், தமிழ்நாடு முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளி விவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழுத் தகவல் கிடைக்கப்பெறும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், "சாதி ரீதியாக தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளைச் சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டு(2021) நடக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிரீதியாக நடத்த வேண்டுமென அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

கடந்த 1931களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, சாதி ரீதியான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.  அதன் அடிப்படையிலேயே கல்வி, வேலை வாய்ப்புகளில் தற்போது இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Dec 1, 2020, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.