சென்னை: தமிழ்நாடு முழுவதும் 14ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது.
பொங்கல் பரிசில் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் எனவும், திமுக அரசு அளித்துவரும் பொங்கல் பரிசுப்பொருள்கள் தரமில்லை எனவும் பலதரப்பட்ட மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில், ஜெயக்குமாரின் தொகுதியான ராயபுரத்தில் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ராயபுரம் தொகுதியின் மசூதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மூலகொத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மு.க. ஸ்டாலின் ஆய்வுமேற்கொண்டு பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.