சென்னை: விஞ்ஞானி முதல் குடியரசுத் தலைவர் வரை என்ற பெயருக்கு ஒரே சொந்தக்காரர், ஏபிஜே அப்துல் கலாம். தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளான அக்டோபர் 15ஆம் தேதி சர்வதேச மாணவர்களின் தினமாக கொண்டாடப்படுகிறது.
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார்.#CMMKSTALIN | #TNDIPR | pic.twitter.com/1mknpF9FTW
— TN DIPR (@TNDIPRNEWS) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார்.#CMMKSTALIN | #TNDIPR | pic.twitter.com/1mknpF9FTW
— TN DIPR (@TNDIPRNEWS) October 15, 2023மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார்.#CMMKSTALIN | #TNDIPR | pic.twitter.com/1mknpF9FTW
— TN DIPR (@TNDIPRNEWS) October 15, 2023
தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டி வளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2021-2022ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்-க்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அப்துல் கலாமின் பிறந்தநாளான இன்று (அக்.15), சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் "ஜெய் ஸ்ரீராம்" கோஷம்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!