ETV Bharat / state

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு... நல்ல முடிவு எடுக்கப்படும் - முதலமைச்சர்

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

cm
முதலமைச்சர் ஸ்டாலின்
author img

By

Published : Jun 23, 2021, 2:22 PM IST

சென்னை கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது நாளாக, ஆளுநர் உரை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று நடைபெற்றுவருகிறது. அப்போது, பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைவைத்தார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 20 விழுக்காட்டில் உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு வழங்கப்பட்டிருக்கிறது. இதைச் செயல்படுத்த மருத்துவர் ராமதாஸ் கடிதம் அளித்தார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கரோனா தொற்றைக் குறைக்க இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறது.

சட்டப்பேரவை உறுப்பினர் கூறிய விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்து பேசி விரிவாக ஆய்வு நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கைகள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.