சென்னை: குமரிக் கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியால் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழையானது கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், பலர் அவர்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த மாவட்டங்களில் நேற்று முன்தினம் (டிச.21) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இம்மாவட்டங்களில் நிவாரணப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மாண்புமிகு @Subramanian_ma தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
— M.K.Stalin (@mkstalin) December 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட மாண்புமிகு @MRKPanneer… pic.twitter.com/8NAOIjviFT
">பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மாண்புமிகு @Subramanian_ma தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
— M.K.Stalin (@mkstalin) December 23, 2023
அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட மாண்புமிகு @MRKPanneer… pic.twitter.com/8NAOIjviFTபெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மாண்புமிகு @Subramanian_ma தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
— M.K.Stalin (@mkstalin) December 23, 2023
அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட மாண்புமிகு @MRKPanneer… pic.twitter.com/8NAOIjviFT
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது X சமூவ வலைதளப் பக்கத்தில் கூறியதாவது, “பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதி செய்திட, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல், உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர்.
தலைமைச் செயலாளர், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து, அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தென் மாவட்ட வெள்ளத்தால் பொதுப்பணித்துறைக்கு ரூ.1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் - அமைச்சர் எ.வ.வேலு