ETV Bharat / state

எம்பி செந்தில்குமார் சர்ச்சை பேச்சு; முதலமைச்சர் ஸ்டாலின் கண்டித்ததாக ஆர்.எஸ்.பாரதி அறிக்கை! - கோ மூத்திர மாநிலங்கள்

MP SenthilKumar Controversy Speech: தருமபுரி எம்பி செந்தில்குமார், மக்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Dec 6, 2023, 7:06 AM IST

சென்னை: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாளான நேற்று (டிச.5) தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் பேசினார். அப்போது அவர், "யூனியன் பிரதேசங்கள் எப்போதுமே மாநிலங்களாக மாறுவதையே நோக்குகின்றன. ஆனால் ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாறுவது, இதுவே முதல் முறை. பல மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அவர்களால் ஒரு மாநிலத்தை வெல்ல முடியாமல் போகும்போது, ஆளுநரின் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கக்கூடிய யூனியன் பிரதேசமாக மாற்றி, அவர்கள் மூலம் ஆட்சியை நடத்த முடியும். அவர்கள் (பாஜக) வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்திருந்தால், வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள். எனவே, இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிகிறது. அதேபோல், இந்தி பேசும் மாநிலங்களை பொதுவாக கோ மூத்திர மாநிலங்கள் என அழைப்பர் (Gaumutra states)” என தெரிவித்து இருந்தார்.

இதற்கு பாஜக மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். முக்கியமாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவின் தவறான ஆட்சியால் சென்னை மூழ்கிக் கொண்டிருக்கிறது எனவும், இந்த உணர்வற்ற கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறி இருந்தார்.

மேலும், புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருப்பதையும், கர்நாடகாவில் சமீப காலம் வரை பாஜக ஆட்சியில் இருந்ததையும் அவர் மறந்துவிட்டார் என குறிப்பிட்ட அண்ணாமலை, திமுகவின் ஆணவமே அவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேநேரம், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், இது போன்ற தேவையில்லாத பேச்சுக்கு எம்பி செந்தில்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இவ்வாறு அனைத்து பகுதிகளில் இருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுக்க, "முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லைப் பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என தனது X வலைத்தளப் பக்கத்தில் செந்தில்குமார் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டு உள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார். இதனை அறிந்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், செந்தில்குமாரைக் கடுமையாக கண்டித்தார்.

பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அறிக்கை ஒன்றை செந்தில்குமார் வெளியிட்டு உள்ளார். அவ்வாறு செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லைப் பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.

பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும், பண்பாட்டையும் காக்கும் வகையில் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைமை சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அண்ணா சுட்டிக்காட்டிய கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் அனைவரும் முறையாகப் பின்பற்றியாக வேண்டும். மேலும், அகில இந்தியப் பிரச்னைகள் பற்றி கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மக்களவையில் திமுக எம்.பி. செந்தில் குமார் கூறியது என்ன? எதிர்ப்பு வலுக்க என்ன காரணம்? முழுத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.