சென்னை: இந்தியாவில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்” - என வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கடிதம்.#CMMKSTALIN | #TNDIPR |@PMOIndia @CMOTamilnadu pic.twitter.com/4tnn5TfOZC
— TN DIPR (@TNDIPRNEWS) October 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்” - என வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கடிதம்.#CMMKSTALIN | #TNDIPR |@PMOIndia @CMOTamilnadu pic.twitter.com/4tnn5TfOZC
— TN DIPR (@TNDIPRNEWS) October 21, 2023தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்” - என வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கடிதம்.#CMMKSTALIN | #TNDIPR |@PMOIndia @CMOTamilnadu pic.twitter.com/4tnn5TfOZC
— TN DIPR (@TNDIPRNEWS) October 21, 2023
இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டவும், சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திடவும், வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரிவான சாதிவாரிக் கணக்கெடுப்பை இணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு உடனடியாகத் தொடங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், வரவிருக்கக் கூடிய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அளவில் இதற்கான நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு, முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலைநாட்டிட இயலும் என்றும், சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “ரங்கசாமி முதலமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி