சென்னை: முதலமைச்சர் பயணம் தொடர்பான பயணத்திட்டம் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை காலை சென்னையிலிருந்து கிளம்பும் முதலமைச்சர் காலை 9.15 மணிக்கு சேலம் சென்று அங்கு அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், அங்குள்ள மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.
பின்னர், மாலை கோவை சென்று அங்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அன்று இரவு மதுரை வரும் அவர், அடுத்தநாளான 21ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ந்து அன்று மாலை திருச்சி சென்று மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு அன்று இரவே அவர் சென்னை திரும்புகிறார்.
இதையும் படிங்க: நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம் - விழிப்புணர்வு காணொலி வெளியிட்ட முதலமைச்சர்!