சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிச.30) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 23 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அதில் சென்னை, திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 3 காவல் நிலையங்கள், காவல் துறையினர் பயன்பெறும் வகையிலான ஆவடியில் சமுதாய நல கூட கட்டடங்கள், திருவாரூர், கோவை மாவட்டத்தில் 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பாஜக - திமுக கூட்டணியா? முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்!