தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு 8 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடக்கிவைத்தார்.
அந்த திட்டங்கள் பின்வருமாறு...
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம், ஜமுனாமரத்தூரில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டடங்கள்
- வட்டாட்சியர் குடியிருப்புகள், அரியலூரில் கட்டப்பட்டுள்ள சார் ஆட்சியர் குடியிருப்பு
- சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள சென்னை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டடம்
- நில அளவு, நிலவரித் திட்ட துறையில், நில அளவை குறியீடு செய்தல், நில ஆவணங்களை பராமரித்தல், நில உரிமை மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்களை உரிய பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் கிராமம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 2 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக கட்டடத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 1,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் தரை மற்றும் முதல் தளத்துடன் 2 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக கட்டடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்.
இதையும் படிங்க:நோய் முற்றிய பிறகு சென்றால் பலனில்லை - முதலமைச்சர் அறிவுறுத்தல்