ETV Bharat / state

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா - முதலமைச்சர் ஆலோசனை

author img

By

Published : Nov 4, 2019, 1:46 PM IST

சென்னை: சேலம் மாவட்டம் தலைவாசலில் அமையவுள்ள நவீன கால்நடை பூங்கா குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

cm edappadi palanisamy

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா ரூ.396 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி அவர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தலைவாசலில் அமைக்கப்படும் நவீன கால்நடை பூங்கா 900 ஏக்கர் நிலப்பரப்பில் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட இருக்கிறது. எனவே, இந்தப் பூங்கா மிகப்பெரிய அளவில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, செயல்படுத்தப்படவுள்ளது.

அவை பின்வருமாறு:

  • முதலாவது பிரிவில், நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு, இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. இங்கு நாட்டு நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகமும் அமைக்கப்படும்.
  • இரண்டாம் பிரிவில், பால், மீன், முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளும் செய்யப்படும்.
  • மூன்றாம் பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி, தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மூத்த அமைச்சர்கள், அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அமையவுள்ள கால்நடை பூங்காவில் எந்த மாதிரியான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்பது பற்றி அலுவலர்கள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். விரையில் அடுத்த கட்ட வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:சேலம் தலைவாசலில் 396 கோடியில் ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடை பூங்கா அமைய உள்ளது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடைப் பூங்கா 396 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலைைய ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் உலகத் தரம் வாய்ந்த ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடைப் பூங்கா ஒன்று 396 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று தெரிவித்தார்.

மூன்று பிரிவுகளாக அமைய உள்ள இப்பூங்காவின் முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள் அமைக்கப்படும்.

மேலும் நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்படும். இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தப்படும். 3ம் பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இவ்வளாகம், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட வளாகமாக அமையும என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தலைவாசலில் அமைய உள்ள கால்நடை பூங்கா தொடர்பாக கால்நடைத் துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் துணை அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கால்நடைத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ள ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அமையவுள்ள பூங்கா குறித்தும் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படவுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.