இது குறித்து அவர் இன்று சட்டப்பேரவையில் பேசுகையில், தமிழ்நாட்டி மாநில எல்லைகள் மூடப்பட்டன. மருத்துவமனைகளின் புதிய கட்டடங்களில் கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது.
கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது 1939 விதி 43, 44-இன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள் யாராவது விடுதியில் தங்கியிருந்தால் விடுதி ஊழியர்கள் சுகாதார நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்,. இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா பாதிப்பு இருப்பதை மக்கள் தெரிவிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வைரஸ் தொற்று இருக்கும் நபரின் தகவல் அந்தக் கட்டடத்தின் வெளியில் ஒட்டப்படும். தொழிற்சாலைகள் உள்ளிட்ட, பிற நிறுவனங்களில் 50 விழுக்காடு ஊழியர்களை வைத்து பணிபுரியவைக்க வேண்டும்.
அரசின் செயல்பாட்டுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதுவரை இரண்டு லட்சம் பேர் சோதனைசெய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். இந்த வைரசால் தமிழ்நாட்டில் ஒரு உயிர் இழப்புகூட நடக்கவிட வமாட்டோம்” என்றார்.