ETV Bharat / state

சென்னை வெள்ளத்தால் சேதம் அடைந்த கல்வி மற்றும் அரசு சான்றிதழ்கள் பெறக் கட்டணமில்லா சிறப்பு முகாம்...

Special Camp to get School and Govt Certificates Damage: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிடச் சிறப்பு முகாம்கள் அமைக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 9:01 PM IST

cm-announces-special-camp-to-get-school-and-govt-certificates-damage-of-chennai-flood
சென்னை வெள்ளத்தால் சேதம் அடைந்த "கல்வி, அரசு சான்றிதழ்கள்" பெறக் கட்டணமில்லா சிறப்பு முகாம்...

சென்னை: "மிக்ஜாம்" புயல் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிடச் சிறப்பு முகாம்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி "தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் காரணமாகச் சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி, பொது மக்களுக்குக் கட்டணமின்றி அதனை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.

  • “மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு" -
    மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவு#CycloneMichaung pic.twitter.com/t4OPaBlLdN

    — CMOTamilNadu (@CMOTamilnadu) December 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வருகின்ற 11-12-2023 (திங்கட்கிழமை) அன்றும், சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் வருகின்ற 12-12-2023 (செவ்வாய்க்கிழமை) அன்றும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்புகள் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும். மேற்படி சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வசதிக்காக, இ-சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு - ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அறிவிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.