தமிழ்நாட்டில் முதலமைச்சரின்கீழ் இயங்கும் குறைதீர்ப்பு துறைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு 'முதல்வரின் முகவரி' எனும் புதிய துறையை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் புகார் மனுக்களுக்குத் தீர்வு காண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படவுள்ளது. இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் இறையன்பு அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளார்.
அதில், 'முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு (ஐஐபிஜிசிஎம்எஸ்), உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு "முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இடமாற்றம்: மறு பரிசீலனை செய்யக்கோரி வழக்கறிஞர்கள் கோரிக்கை