ETV Bharat / state

டாஸ்மாக் பார்களையும் 6 மாதங்களில் மூட வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு - chennai latest news

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதங்களில் மூட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Close down bars in Tasmac shops, MHC order

author img

By

Published : Feb 4, 2022, 12:28 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை, காலி பாட்டில்களைச் சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்குப் பதிலாக பழைய டெண்டர் நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை பெற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி சி. சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, டெண்டர் படிவங்கள் பெறுவதற்கு யாரையும் தடுக்கவில்லை என்றும், விண்ணப்பம் வாங்க விடாமல் தடுக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. இதுவரை தமிழ்நாடு முழுவதும் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேஷ், கரோனா காலத்தில் பார்கள் மூடப்பட்டதால், தங்களுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், கட்டட உரிமையாளர்களின் ஆட்சேபனையில்லா சான்று தேவையில்லை எனக் கூறிவிட்டு, தற்போது வாடகை ஒப்பந்தங்கள் கேட்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக டெண்டர் நடைமுறைகள் நிறுத்தப்பட்ட எட்டு மாவட்டங்களைப் பொறுத்தவரை புதிய டெண்டர் கோரக்கூடாது என உத்தரவிடவும், ஒரு அலுவலரை நியமித்து டெண்டர்களை திறக்க வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் காணொலி பதிவுசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தார்.

இதையடுத்த்து, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சரவணன், வணிக நோக்கத்திற்காகச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை டாஸ்மாக் பார்களில் அனுமதிக்க முடியாது. அதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதங்களில் மூட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடிசெய்தார்.

இதையும் படிங்க: நிலத்தை அபகரித்த அதிமுக பிரமுகர்: மீட்டுத் தரக்கோரி முதியவர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.