ETV Bharat / state

பணி நிரந்தரம் செய்யக் கோரி டிஜிபியிடம் மனு அளித்த தூய்மைப் பணியாளர்கள்! - டிஜிபியிடம் மனு அளித்த தூய்மைப் பணியாளர்கள்

சென்னை: காவல் துறையில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் காவல் தலைமை இயக்குநரை (டிஜிபி) சந்தித்து மனு அளித்துள்ளனர்.

மனு அளித்த தூய்மைப் பணியாளர்
மனு அளித்த தூய்மைப் பணியாளர்
author img

By

Published : Dec 23, 2020, 5:47 PM IST

கடந்த 2012-2013 ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு அரசாணை 400இன் கீழ் சுமார் 500 பேர் காவல் துறையில் தூய்மைப்பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் சிறப்பு காலமுறை முறை ஊதியத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல் கல்வித்துறையிலும் தூய்மைப் பணியில் 2 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு கல்வித்துறையில் தூய்மைப் பணியாளர்களாக சேர்ந்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, முதலமைச்சரின் தனிப்பிரிவு, காவல் தலைமை இயக்குநர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

டிஜிபியிடம் மனு அளித்த தூய்மைப் பணியாளர்கள்

இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிபதி தண்டபாணி வழங்கிய தீர்ப்பில், கல்வித்துறை தூய்மைப் ணியார்களுக்கு செய்யப்பட்ட பணி நிரந்தர ஆணையைப் போல காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் அளிக்கலாம் என்று கூறி அரசுக்கு பரிந்துரை செய்தார்.

தற்போது அந்த பரிந்துரையை நிறைவேற்றக் கோரி காவல் துறை தூய்மைப் பணியாளர்கள் காவல் தலைமை இயக்குநரிடம் மனு அளித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென மனு அளித்த தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை

மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சியில், தாங்கள் 500 பேர் பணியில் சேர்ந்ததாகவும், அதில் தற்போது 365 பேர் மட்டுமே பணியாற்றுவதாகவும் தெரிவித்த அவர்கள், போதிய வருமானம் இல்லாததால் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு ஒருவர் தற்கொலையும் செய்து கொண்ட அதிர்ச்சி தகவலையும் பகிர்ந்து கொண்டனர்.

டிஜிபியிடம் மனு அளித்த தூய்மைப் பணியாளர்கள்!

தற்போது பணியிலிருப்பவர்களில் 75விழுக்காடு கைம்பெண்கள், சுமார் 60 பேர் மாற்றுத்திறனாளிகள் என்று தெரிவித்த அவர்கள், விரைந்து பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கினால் உதவியாக இருக்கும் எனவும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:'தூய்மை பணியாளர்கள் பட்டம் வழங்கிய அரசு ஊதியம் தர மறுக்கிறது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.