ETV Bharat / state

12ஆம் வகுப்பு தேர்வு முடிவு 19ஆம் தேதி வெளியாகிறது? - hse board exam results

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த 12ஆம் வகுப்பு மாணாக்கர்களின் தேர்வு முடிவுகளை 19ஆம் தேதி காலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

12th std exam results
12ஆம் வகுப்பு தேர்வு முடிவு
author img

By

Published : Jul 16, 2021, 12:41 PM IST

சென்னை: கரோனா பெருந்தொற்று காரணமாக 2020-2021ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் முறை குறித்து விளக்கமளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டு குழுவையும் நியமித்தார். மதிப்பெண் வழங்கும் முறை குறித்த அறிக்கையை ஜூன் 25ஆம் தேதி முதலமைச்சரிடம் அக்குழு வழங்கியது.

அதனை ஆய்வு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவதற்குரிய முறைகளை வெளியிட்டார்.

மதிப்பெண் வழங்கும் முறை

அதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரி மதிப்பெண்ணில் 50 விழுக்காடு, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்து தேர்வில் இருந்து மட்டும் 20 விழுக்காடு மதிப்பெண், 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு, அக மதிப்பீட்டில் இருந்து 30 விழுக்காடு மதிப்பெண் கணக்கிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்து இருந்தாலோ அந்த மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் வெளிமாநிலங்கள் மற்றும் வேறு பாடத்திட்டங்களில் பத்தாம் வகுப்பு படித்து தற்போது 12ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண்களை பள்ளிகளிலிருந்து பெற்றுள்ளது. அரசு தேர்வுத் துறையின் மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளன.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை

தொடர்ந்து, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவதற்கான முறைகளை அரசாணையாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஜூலை 12ஆம் தேதி வெளியிட்டார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று (ஜூலை16) மாலையில் தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் 19-ஆம் தேதி காலையில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: JEE Main 4ஆம் கட்ட தேர்வு தேதி மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.