நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு பிரிவினர் போரட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தாம்பரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஜுபிர் ரஹ்மான், கூட்டமைப்பின் ஆலோசகர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, மதங்களால் நாட்டை பிளவுபடுத்தக் கூடாது எனவும் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் கோஷமிட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்!