ETV Bharat / state

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்ததன் காரணம் தெரியுமா?

சென்னை: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்காததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

DMK to walk away from assembly
DMK to walk away from assembly
author img

By

Published : Jan 7, 2020, 5:21 PM IST

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிதாகத் தொடர்ந்துள்ள வழக்கு என பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டுத் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி விவாதிக்க அனுமதி கோரியது.

ஆனால், சட்டப்பேரவை சபாநாயகர் அனுமதியளிக்காததைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ' கடந்த 2.01.2020ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவருக்கு இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கடிதம் மூலம் கோரிக்கை வைத்தேன்.

திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில்
திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

இந்நிலையில் இன்று இதை நேரமில்லா நேரத்தில் பேச அனுமதிக்க சபாநாயகரிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. இந்தியா முழுவதும் பேரணி, ஆர்ப்பாட்டம், துப்பாக்கிச் சூடு என இவ்விவகாரம் பற்றி எரிந்து வருகிறது. எனவே இதை முக்கியப் பிரச்னையாகக் கருதி சட்டமன்றத்தில் எழுப்பினோம். ஆனால், சபாநாயகர் பேச அனுமதி அளிக்கவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பல மாநிலக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் வாக்கு அளித்தாலும் அவர்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதிமுக மாநிலங்களவையில் ஆதரித்து வாக்கு அளித்தும் இங்கும் பாஜக அடிமை அரசாக செயல்படுகிறது. மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி விவாதிக்க அனுமதிக்காததைக் கண்டிக்கும் விதத்தில் சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் சர்ச்சை!

Intro:Body:இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்காததை கண்டித்து சட்ட பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2.01.2020 ஆம் தேதி சட்ட பேரவை தலைவருக்கு இந்திய குடியுரிமை சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கடிதம் மூலம் கோரிக்கை வைத்தேன்.

இந்நிலையில் இன்று இதை நேரமில்லா நேரத்தில் பேச அனுமதிக்க சபாநாயகரிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் அனுமதி அளிக்கவில்லை.

இந்திய முழுவதும் பேரணி, ஆர்பாட்டம், துப்பாக்கி சூடு என தீ பற்றி எரிந்து வருகிறது. எனவே இதை முக்கிய பிரச்சனையாக கருதி சட்டமன்றத்தில் எழுப்பினோம். ஆனால் சபாநாயகர் பேச அனுமதி அளிக்கவில்லை..

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல மாநில கட்சிகள் நாடாளுமன்றத்தில் வாக்கு அளித்தாலும் அவர்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். ஆனால் அதிமுக மாநிலங்களவையில் ஆதரித்து வாக்கு அளித்தும் இங்கும் பாஜக அடிமை அரசாக செயல்பாடுகிறது. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி விவாதிக்க அனுமதிக்காததை
கண்டிக்கும் விதத்தில் சட்ட பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது என தெரிவித்தார்.. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.