ETV Bharat / state

இணைய வழியில் நேரடி நெல் கொள்முதல்: நுகர்பொருள் வாணிபக் கழகம் சுற்றறிக்கை - நேரடி நெல் கொள்முதல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழியாகப் பதிவுசெய்ய நுகர்பொருள் வாணிபக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இணைய வழியில் நேரடி நெல் கொள்முதல்
இணைய வழியில் நேரடி நெல் கொள்முதல்
author img

By

Published : Jan 31, 2022, 3:12 PM IST

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்களுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழியாகப் பதிவுசெய்ய வேண்டும் என அறிவுறுத்தி, அக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ”தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை எளிதில் விற்பனை செய்திட இணையவழி பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு 2022 ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், விவசாயிகளின் நலன்கருதி இணைய வழிப் பதிவுமுறையின் மூலம் விரைவில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் ஆவணம், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் பட்டியல் எழுத்தர்கள் இணைய வழியில் பதிவேற்றம் செய்து உடனுக்குடன் டோக்கன் வழங்கி முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்திட வேண்டும்.

இதனைச் சம்பந்தப்பட்ட பட்டியல் எழுத்தர்கள், கொள்முதல் அலுவலர்கள், துணை மேலாளர்கள் (கொள்முதல் & இயக்கம்) அவர்களுக்கு அறிவுறுத்துமாறு முதுநிலை மண்டல மேலாளர்கள் / மண்டல மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முனீஷ்வர்நாத்தை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.