ETV Bharat / state

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய 40 இடங்களில் ரெய்டு! - IT Raid in Chennai

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில் இன்று (ஆக. 2) வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய 40 இடங்களில் ரெய்டு!

author img

By

Published : Aug 2, 2022, 8:15 AM IST

Updated : Aug 2, 2022, 10:54 AM IST

சென்னை: கோபுரம் பிலிம்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களை வெளியிட்டு வருபவர், மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன். இவர் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். மேலும் மற்ற சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார்.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய 40 இடங்களில் ரெய்டு!

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை உதவி ஆணையர் முத்து தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினருடன் இன்று (ஆக. 2) காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தியாகராய நகரில் அமைந்துள்ள அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம் மற்றும் திருவல்லிக்கேணி உட்பட சென்னையில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் மதுரை மேலமாசி வீதியில் இருக்கக்கூடிய அவருடைய அலுவலகம், கீரைத்துறை பகுதியில் இருக்கக்கூடிய சொந்த வீடு மற்றும் தெப்பக்குளம் பகுதியில் இருக்கக்கூடிய வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு இவருக்குச் சொந்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிகில் படம் தொடர்பாக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.65 கோடி மற்றும் சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் 2017ஆம் ஆண்டு நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார், தனது மரணத்திற்கு காரணம் அன்புச்செழியன் தான் என கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு செழியனிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

வரி ஏய்ப்பு தொடர்பாக இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் "Super Tax Payer" நடிகர் ரஜினிகாந்த்

Last Updated : Aug 2, 2022, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.