ETV Bharat / state

சியான் 60 ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு! - துருவ் விக்ரம்

சியான் 60 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி அப்படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சியான் 60  chiyaan 60 title and first look  chiyaan 60  first look  chiyaan 60 update  vikram latest movie update  சியான் 60 ஃபர்ஸ்ட்லுக்  சியான் 60 ஃபர்ஸ்ட்லுக் தேதி  chiyaan 60 title and first look releasing date  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  விக்ரம் புதிய படம்  துருவ் விக்ரம்  dhruv vikram latest movie
சியான் 60
author img

By

Published : Aug 15, 2021, 7:17 PM IST

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன் முறையாக திரையில் இணைந்து நடித்திருக்கும் படம், இன்னும் பெயரிடப்படாமல் 'சியான் 60' என சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இதில் விக்ரம் கேங்ஸ்டராகவும், துருவ் விக்ரம் காவல் துறை அலுவலராகவும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றுவந்த நிலையில், படப்பிடிப்பு நேற்றுடன் (ஆக.14) முடிந்துவிட்டதாகப் படக்குழு அறிவித்தது.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 20இல் அறிவிப்பு

இந்நிலையில் இன்று (ஆக. 15) இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகும் என ஒரு போஸ்டருடன் கூடிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதைக்கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இப்படம் தவிர விக்ரம் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' ஆகிய திரைப்படங்களில் நடிகர் விக்ரம் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: காவலரிடம் தேசியக் கொடி பெற்ற மிஷ்கின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.