அமெரிக்கா:மண் மணக்கும் தமிழ் கிராமிய பாடல்களை அறிந்திராத இளைய சமுதாயத்தினர் தமிழ் கிராமிய பாடல்களை அடுத்த சந்ததியருக்கு அறிமுகம் செய்யும் வகையில் அமெரிக்க சான் அன்டோனியோ வில் கும்மி பாடல்களுடன் சித்திரைத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சான்ஆன்டோனியோ இந்து கோவிலில் நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். பாரம்பரிய உறியடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இனிமையான கும்மி பாடல்களை அனைத்து வயதினர் பாடி சித்திரை விழா கொண்டாடினர். அதே போல் சான் ஆன்டனியோ தமிழ்ச் சங்கம் சார்பில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தமிழிசை, பறையிசை, கெட்டிமேளம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் மற்றும் தமிழ் வம்சாவளியினர் சித்திரைத் திருவிழா இசை நிகழ்வில் குடும்பத்துடன் பங்கேற்றனர். பல்வேறு பழங்கால இசைக்கருவி நிகழ்வுகள் மனதிற்கு மகிழ்ச்சி தருவதாக விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:Video:'குத்துனா இப்படி இருக்கணும்' - கள்ளழகர் திருவிழாவில் வெறியாட்டம் போட்ட வெள்ளைக்காரர்!