ETV Bharat / state

சின்னப்பொன்னு மாயம்... தூக்கிச் சென்றது மாநகராட்சியா? - பூங்கா ரயில் நிலையம்

பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்துவந்த சின்னப்பொன்னு நாய்க்கு ஏற்பட்ட அவலநிலை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ChinnaPonnu Dog
author img

By

Published : Nov 18, 2019, 5:00 PM IST

பரபரப்பான சென்னை மாநகரின் சென்ட்ரல் அருகே உள்ள பூங்கா ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு மத்தியில் தன் நண்பர்களான ரயில்வே காவல் துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல் துறையினருடன் தன் கடமையை செவ்வனே செய்து வந்தாள் சின்னப்பொன்னு... ஆனால் அவளுக்கு இப்படி ஒரு கொடுமை நிகழும் என எதிர்பார்த்திருக்க மாட்டாள்... அங்கிருந்து வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சின்னப்பொன்னு ஈடிவி பாரத்தின் முயற்சியால் மீண்டும் பூங்கா ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டாள்...

எங்கோ பிறந்து ரயில் நிலைய வளாகத்தில் காவலாளியாக இருந்து வளர்ந்து வந்தது அந்த சின்னப்பொன்னு என்ற நாய். இதனை யாரும் பராமரிக்கவோ வளர்க்கவோ இல்லை. தன்னையும் தற்காத்துக்கொண்டு பயணிகளுக்கும் பாதுகாவல் அளித்துவந்தது.

பூங்கா ரயில் நிலைய அலுவலகம் அருகில் எப்போதும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் சின்னப்பொன்னு காவல்துறையினரின் செல்லப்பிள்ளையாக இருந்ததோடு, பயணிகளின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த தவறியதில்லை.

ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பில் முழு அக்கறை காட்டிவந்த அந்த ஐந்தறிவு ஜீவி ரயில் நிலையத்தின் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு தண்டவாளம் வழியாக இறங்கிச் செல்பவர்களை விட்டுவைப்பதில்லை. அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில், குரைத்து விரட்டி அதற்கான சரியான வழியில் பயணிக்கச் செய்து வந்தது.

அதுமட்டுமின்றி, படிகளில் தொங்கியபடி யாரேனும் ரயிலில் பயணித்தால் உடனே அவர்களையும் விரட்டி ரயிலின் உள் பகுதிக்கு செல்ல வைத்து மனித உயிர்களை மறைமுகமாக காவல்துறையினருடன் இணைந்து காத்து வந்ததே சின்னப்பொன்னுவின் தலையாய பணியாகும். யாருக்கும் எவ்வித தொந்தரவும் இன்றி ரயில் நிலையத்தில் வலம் வந்துகொண்டிருந்த சின்னப்பொன்னு நாய் பற்றிய செய்தி ஊடக வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அதனை பிடிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வந்ததாகத் தெரிகிறது.

சின்னப்பொன்னு நாய்க்கு ஏற்பட்ட அவலநிலை

இதனிடையே, மாநகராட்சி பிராணிகள் பிடிக்கும் வாகனத்தில் கதறக் கதற கயிற்றால் இழுத்துக் செல்லப்பட்டது அந்த வாயில்லா ஜீவன். எந்த பாவமும் அறியாத அந்த உயிரை கொடூரமான முறையில் இழுத்துச் செல்லப்பட்டது குறித்து ஈடிவி பாரத் சம்பந்தப்பட்ட துறைக்கு எடுத்துச் சென்றது. அதற்கு விளக்கம் அளித்த மாநகராட்சி நிர்வாகம், பூங்கா ரயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை இருப்பதாக வந்த புகாரின் பேரில் அங்கு சுற்றித்திரியும் நாய்களை குறிவைத்ததாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சின்னப்பொன்னு யாருக்கும் தொந்தரவு இன்றி காவல் பணியையே செய்து வந்ததாகக் கொடுத்த அழுத்தம் காரணமாக அதனை மீண்டும் கொண்டு வந்து விடுகிறோம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

பூங்காவின் செல்லப்பிள்ளையாக இருந்த சின்னப்பொன்னு மீண்டும் ரயில் நிலையத்திலேயே சுதந்திரமாக விடப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், பிடித்துச் செல்லப்பட்டது சின்னப்பொன்னு நாய் அல்ல என்று அங்குள்ள கடைக்காரர்கள் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் பிடித்துச் செல்லப்பட்டது சின்னப்பொன்னுதானா, அப்படி சின்னப்பொன்னு நாயை மாநகராட்சி பிடித்துச்செல்லவில்லை என்றால் சின்னப்பொன்னுவின் நிலை என்ன உள்ளிட்ட கேள்விகள் தற்போது எழுந்திருக்கிறது.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 18.11.19

கதறக் கதற இழுத்துச் செல்லப்பட்ட சின்னப்பொன்னு நாய்...

பரபரப்பான சென்னை மாநகரில் செண்ட் ரல் அருகே உள்ள பூங்கா ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு மத்தியில் தன் நண்பர்களான ரயில்வே காவல்துறையினர் தமிழக காவல்துறையினருடன் தன் கடமையை செவ்வனே செய்து வந்தாள் சின்னப்பொன்னு... ஆனால் அவளுக்கு இப்படி ஒரு கொடுமை நிகழும் என எதிர்பார்த்திருக்க மாட்டாள்... அங்கிருந்து வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சின்னப்பொன்னு இ.டி.பாரத்தின் முயற்சியால் மீண்டும் பூங்கா ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டால்...

யார் அந்த சின்னப்பொன்னு, காவல்துறையினருடன் சேர்ந்து என்ன செய்தாள் அவள்..! யார் அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றது..!?

வழக்கமான தெரு நாய்கள் போன்றது தான் சின்னப்பொன்னு என அழைக்கப்படும் அந்த நாய்.. சின்னப்பொன்னு தன்னை தானே காத்துக்கொள்கிறதேயன்றி யாரும் அதனை உணவிட்டு வளக்கவில்லை. பூங்கா நிலைய அதிகாரி அலுவலகம் அருகில் எப்போதும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் அவள் காவல்துறையினரின் செல்லப்பிள்ளையாக இருப்பது மட்டுமின்றி, முறைகேடாக ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு ரயில் தண்டவாளம் வழியாக இறங்கி ஆபத்தை உணராமல் கடந்து செல்ல நினைப்பவர்களை குரைத்து விரட்டி அதற்கான சரியான வழியில் வர வைப்பதும், ரயில்களில் பயணிப்பவர்கள் படிகளில் தொடங்கியபடி யாரேனும் சென்றால் அவர்களையும் விரட்டி ரயிலின் உள் பகுதிக்கு செல்ல வைத்து அவர்களின் உயிர்களை மறைமுகமாக காவல்துறையினருடன் இணைந்து காப்பதே சின்னப்பொன்னுவின் தலையாயப் பணியாகும். மற்ற நேரங்களில் யாருக்கும் தொந்தரவின்றி ஓர் ஓரமாக ஓய்வு எடுத்துக்கொள்வது அதன் மற்றொரு பணியாகும். இப்படியாக தன் வாழ்கையை ஒட்டிக்கொண்டு இருந்த சின்னப்பொன்னுவின் சாதனை ஊடக வெளிச்சம் பட்டவுடன் அதனை மாநகராட்சி பிராணிகள் பிடிக்கும் வாகனத்தில் கதறக் கதற கயிற்றால் இழுத்துக் செல்லப்பட்டது. எந்த பாவமும் அறியாத அந்த ஜீவன் கொடூரமான முறையில் இழுத்துச் செல்லப்பட்டதை இ.டி.வி பாரத் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றது. அப்போது பேசிய மாநகராட்சி உயர் அதிகாரிகள் பூங்கா ரயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது என குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அங்கிருந்து அகற்றப்பட்டது... தற்போது அதனை மீண்டும் கொண்டு வந்து விடுகிறோம் எனக் கூறியுள்ளார்...

பூங்காவின் செல்லப்பிள்ளையாக இருந்த சின்னப்பொன்னு மீண்டும் மீள்வாளா..? என்கிற ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர் பலர்...

tn_che_01_special_and_breaking_story_of_dog_chinnapponnu_park_station_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.