ETV Bharat / state

குழந்தைக்கு கை அகற்றப்பட்ட விவகாரம்: தவறு நடந்திருந்தால் நடவடிக்கை என அமைச்சர் உறுதி - Ma Subramanian

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்திற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

childs-arm-removed-issue-action-will-be-taken-if-there-is-a-mistake-minister-msubramanian-said
குழந்தைக்கு கை அகற்றப்பட்ட விவகாரம்: தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் மா.சு
author img

By

Published : Jul 3, 2023, 7:12 PM IST

குழந்தைக்கு கை அகற்றப்பட்ட விவகாரம்: தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் மா.சு

சென்னை: எழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், நாளை மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,‘’குழந்தை விவகாரத்தில் கவனக் குறைவு என்று நீங்களே முடிவு பண்ணக்கூடாது. இந்தக் குழந்தை பிறக்கும் பொழுது 32 வாரத்தில் பிறந்துள்ளது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன.

ரத்த ஓட்டம் குறைவாக சென்றதால், கை தளர்ச்சி ஏற்பட்டு ரத்த உறைதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்துள்ளனர். இந்த தகவல் தெரிந்தவுடன் பெற்றோரை அழைத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வர் தெளிவாக விளக்கி கூறியுள்ளார். பெற்றோர் வைத்த சந்தேகத்தை நாம் புறந்தள்ளி விட முடியாது. அதனால் நாங்களே உடனடியாக கல்லூரி முதல்வரை வைத்து சம்பந்தப்பட்ட மருத்துவ வல்லுனர்களுடன் விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளோம்.

தற்போது வரை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மாலை அல்லது நாளை அதன் விசாரணை அறிக்கை வந்துவிடும். வந்துவிட்டால் அதில் ஏதாவது கவனக் குறைவு கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை விவகாரத்தில் எல்லோரும் வாய்க்கு வந்ததை பேசுவது சரியாக இருக்காது.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர், ஒரு முதலமைச்சராகவே இருந்தவர்.சேலத்தில் குழந்தை இறந்துவிட்டதாகவே பேசுகிறார். இதுபோன்று ஒரு துறையை கேவலப்படுத்துகின்ற வகையில் ஒரு மக்கள் சேவை ஆற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு மகத்தான துறைக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் இதுபோன்ற செய்திகளை பரப்புவதை அன்பு கொண்டு தவித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

மேலும் குழந்தை விவகாரத்தில் ஏதாவது குறைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீங்கள் சொல்லலாம். கவன குறைவுகள் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அந்த குழந்தைக்கு ஒன்றரை வயதாகிறது. தற்போது கூட இயற்கையாக இருக்க வேண்டிய எடையை விட பாதி அளவில் தான் உள்ளது.

சிகிச்சையில் ஏதாவது தவறு இருந்தால் தனியார் மருத்துவர் அழைத்து வாருங்கள் அவர்கள் கூட சோதனை செய்யட்டும் நாங்கள் செலவு செய்து அந்த மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்யச் சொல்கிறோம் எனவும் எதைப் பற்றியும் தெரியாமல் பலரும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி பேசுவது தவறான ஒன்று. எனவே அரசு மருத்துவர்கள் என்றால் அலட்சியம் என்றே பலரும் பேசுவதை நிறுத்த வேண்டும்,

ஏற்கனவே நடைபெற்ற சிகிச்சையின் போது ராஜீவ்காந்தி மருத்துமவமனையில் மோசமான நிலையில் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உயிர் இழக்கும் நிலை வரை சென்று காப்பாற்றப்பட்டது. ஒன்றரை மாதம் வரை சிகிச்சைக்கு பின் தான் அனுப்பி வைத்தனர். மேலும் மூன்று மருத்துவர்கள் கொண்ட விசாரணை குழு நாளை விசாரணை மேற்கொண்ட பின்னர் இது தொடர்பான உறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன், குழந்தை 32 மாதத்தில் பிறந்த குறை மாத குழந்தை மேலும் பிறந்த மூன்றரை மாதத்தில் தலையின் சுற்றளவு அதிகரித்ததால் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

குழந்தைக்கு ஸ்டண்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது அது கடந்த மாதம் மலத்துளையின் வழியாக வெளியே வரவே குழந்தை மீண்டும் அனுமதிக்கப்பட்டு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் நரம்பியல் துறை கண்காணிப்பில் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது குழந்தைக்கு ரத்த திரவ நிலையில் மாறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சனை உருவாகியுள்ளது. அதன்படி ஒன்றாம் தேதி குழந்தையின் கையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் கையில் ரத்தக்குழாய் அடைப்பு இருப்பதால் கையை அகற்றினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது அதனால் கையை அகற்றி மறுத்தவர்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:உடல் எடையைக் குறைக்க உதவும் NSS - W.H.Oவின் வழிகாட்டுதல் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.