ETV Bharat / state

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், பள்ளிகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் மற்றும் கொரட்டூர் தாங்கல் ஏரி புனரமைப்பு பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை 2.0 திட்டம் மற்றும் CITIIS திட்டப் பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் சென்று ஆய்வு

author img

By

Published : May 30, 2022, 9:56 AM IST

சென்னை, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.280 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123 சி.பி. ராமசாமி சாலையில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி மற்றும் கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 135க்குட்பட்ட அசோக் நகர் 19வது அவெள்பூவில் ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் இறையன்பு பணிகளை விரைந்து முடித்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார்.

தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 123க்குட்பட்ட சி.பி. ராமசாமி சாலையில் ரூ.253 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பணிகளை விரைந்து முடித்து ஒரு மாதக் காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

CITIIS திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோடம்பாக்கம் மண்டலம், நெசப்பாக்கம் பள்ளியில் ரூ.3.23 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்

அதனை தொடர்ந்து அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட கொரட்டூர் தாங்கல் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். 16.5 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரியானது ரூ.120 லட்சம் கொள்ளளவு நீர் தேக்கத்தை கொண்டுள்ளது. ரூ891 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த ஏரியைச் சுற்றிலும் பசுமை பரப்பளவினை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணி, சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவுற்று ஒரு மாத காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என இறையன்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ’அரசு பள்ளியைத் தத்தெடுக்க உள்ளேன்..!’ - நடிகர் ஆரி அர்ஜுனன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.