மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனான ஆலோசனையின்போது, கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் அதிக தளர்வுகள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிந்து வெளியே வருவதை அனைத்து ஆட்சியர்களும் உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த பின்னர், பேருந்து, ரயில், பொது போக்குவரத்து அனுமதி வழங்கியுள்ளது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலருமான அதுல்ய மிஸ்ரா, கூடுதல் தலைமைச் செயலரும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலருமான முகமது நசிமுதீன், காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர்/ஆணையர் க. பணீந்திர ரெட்டி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், பொதுத் துறை முதன்மைச் செயலர் ப. செந்தில்குமார், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் கோ. பிரகாஷ், தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழக மேலாண் இயக்குநர் மருத்துவர் பி. உமாநாத், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்...!