தமிழ்நாடு தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுவதையொட்டி அடுத்த தலைமைச் செயலராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். 1985ஆம் ஆண்டு அரசு பணியில் சேர்ந்த இவர், கூடுதல் தலைமைச் செயலராகவும், ஒன்பது ஆண்டுகள் நிதித்துறையின் முதன்மைச் செயலராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள இவர், இன்று தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள முதல் நாள் மானியக் கோரிக்கையில் சுற்றுச்சூழல், வனத்துறை மீதான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், அவர் இன்று தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.