சென்னை: கரூர் மாவட்டத்தில் அக்டோபர் 25ஆம் தேதி நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற பெண் தனக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்ய கோரிக்கைை வைத்தார்.
இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு ஒன்றினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஒதுக்கீடு செய்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயலை பாராட்டி தலைமைச் செயலர் இறையன்பு அவருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
![தலைமைச் செயலாளர் வாழ்த்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/whatsapp-image-2021-10-26-at-24854-pm_2610newsroom_1635243812_95.jpeg)
தலைமைச் செயலாளர் இறையன்பு தனது கடிதத்தில், "கரூரில் 50 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற பெண்ணிற்கு உடனடி நிவாரணமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு ஒன்றினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அப்பெண்ணிற்கும் அவரது உடல் ஊனமுற்ற மகனுக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்களது நிருவாகப் பணியை நான் மனதாரப் பாராட்டுகிறேன். தங்களின் பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை!