ETV Bharat / state

தனியார் வசமாகும் அரசுப்பணி விவகாரம்: தலைமைச்செயலக சங்கத்தினர் மனு - to revoke GO of Hundred and Fifteenth

அரசாணை 115-ஐ ரத்து செய்வது தொடர்பாக, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 9, 2022, 4:07 PM IST

Updated : Nov 9, 2022, 4:50 PM IST

சென்னை: அரசுப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் அரசாணை 115-ஐ ரத்து செய்யக்கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

பின் செய்தியாளகளிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், 'அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும் என முன்வைத்த கோரிக்கைக்கு, முதலமைச்சர் ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ளதாகவும்; அதேபோல், அரசுப்பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் குழுவை கலைத்துவிட வேண்டும் எனவும், நிலுவையிலுள்ள அகவிலைப்படியை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்' கூறினார்.

முன்னதாக, 18.10.22 அன்று வெளியிடப்பட்ட அரசாணை இணையதளத்தில் கூட வெளியிடவில்லை எனவும்; தற்போதே கீழ்நிலை பணியாளர்கள் தனியார்வசம் தான் சென்று கொண்டுள்ளது என்றும்; தனியார் லாபநோக்குடன் தான் செயல்படுவார்கள் எனவும்; எனவே, அரசாணை 115-ஐ ரத்து செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 'இளைஞர்களின் கனவை வீணாக்கும் திமுக... அரசாணை 115-ஐ உடனடியாக ரத்து செய்க'

Last Updated : Nov 9, 2022, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.