ETV Bharat / state

புத்தொழில் வளர்ச்சிக்காவே குளோபல் தமிழ் ஏஞ்செல்ஸ் - முதலமைச்சர் ஸ்டாலின் - chennai

புத்தொழில் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளில் அனைவரையும் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் குளோபல் தமிழ் ஏஞ்செல்ஸ் (Global Tamil Angels) தளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்
author img

By

Published : Jan 10, 2023, 7:00 AM IST

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜனவரி 9) வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து நடத்திய உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகத் தமிழ் முதலீட்டாளர்களையும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள Global Tamil Angels (www.tamilangels.fund) இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

அதன்பின் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நம் மாநிலத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்கான நல்லதொரு சூழலை உருவாக்கும் நோக்கத்துடன், பல்வேறு ஆக்கப்பூர்வமான புதிய செயல்திட்டங்களை அரசு பொறுப்பேற்றதிலிருந்து செயல்படுத்தி வருகிறது. புத்தொழில் சார்ந்த செயல்பாட்டுக்கான 'லீடர்'(leader) அங்கீகாரத்தினை ஒன்றிய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா (Startup India) அமைப்பு தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில்களுக்கான முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடந்த ஆண்டு கிடைத்துள்ளன. இது 2021ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 70 விழுக்காடு அதிகமாகும். இந்தியாவில் புத்தொழில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இந்த விழுக்காடு கடந்த ஆண்டு எதிர்மறையாக இருந்தது. அத்தகைய மந்தமான பொருளாதாரச் சூழலிலும் தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இது காட்டுகிறது.

புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகளில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருப்பதை, அண்மையில் 'இந்தியா டுடே' என்ற ஏட்டின் ஆய்வறிக்கை கூறியது. தொழில்கள் தொடங்கி நடத்துவதற்கான இலகுவான சூழலை அமைத்து இருப்பதிலும் பதிமூன்றாம் இடத்தில் இருந்து, மூன்றாம் இடத்திற்கு தமிழ்நாட்டை நாம் மேம்படுத்தி இருக்கிறோம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கொள்கை, வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழிற்கொள்கை ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது.

பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைத் தொகுப்புக்கான அரசாணை ஒன்றும் அண்மையில் வெளியிடப்பட்டது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்துத் துறை வளர்ச்சியை இலக்காகக் கொண்டது நமது அரசு. அதில் தொழில்துறை மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. அனைத்து விதமான தொழில்களும் வளர வேண்டும்.

இதற்காக, புத்தொழில் மற்றும் புத்தாக்கத் துறையிலும் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி ஏற்பட ஏதுவாக வட்டாரப் புத்தொழில் மையங்கள் மதுரை, திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. பட்டியலினத்தவர், பழங்குடியினர் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் நடத்தும் புத்தொழில் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்யும் பொருட்டு 30 கோடி ரூபாய் நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

தொடக்கநிலை புத்தொழில் நிறுவனங்களுக்காக வழங்கப்படும் மானியங்களில் பெண்களுக்கும், இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்து செயல்படும் நிறுவனங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது. வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் நோக்கத்துடன் 100 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக காலநிலை மாற்றம் காரணமாக உருவாகியுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தரும் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும் பொருட்டு, ஆயிரம் கோடி ரூபாய் பசுமை நிதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும், இதுபோன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலகளாவிய தமிழ் முதலீட்டாளர்களும் பெருமளவில் பங்கு பெற வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு – குறிப்பாக எல்லா தலைமுறையினரின் புத்தொழில் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளில் உங்கள் அனைவரையும் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் இன்று நம் அரசின் நிறுவனமான டான்சிம் மூலமாக குளோபல் தமிழ் ஏஞ்செல்ஸ் (Global Tamil Angels) தளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகெங்கும் வாழும் முதலீடு செய்யும் சக்தி படைத்த தமிழர்கள் நம் மாநிலத்தில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு மட்டுமல்லாது, அவர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட முடியும். இதற்கான ஒருங்கிணைப்பு சேவைகள் அனைத்தும் டான்சிம் நிறுவனத்தால் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

இன்று தொடங்கப்படும் இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக “அமெரிக்கத் தமிழ் நிதியம்” என்ற அமெரிக்க வாழ் தமிழர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு மூலமாக 16 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டின் தொடக்கநிலை புத்தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: DMK: தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைக்கத் தயாரா? வானதி சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.