கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திவருகிறது. அதன்படி, பள்ளி - கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மார்ச் 31ஆம் தேதிவரை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பையடுத்து, சென்னை தலைமைச்செயலகத்தில் மூன்று மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், கரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், போக்குவரத்தை சீர்செய்தல், பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: வாகனங்களை எடுத்துச் செல்ல அறிவுறுத்தல் - மெட்ரோ ரயில் நிறுவனம்