ETV Bharat / state

மதில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்! - மாநில பேரிடர் நிவாரண நிதி

சென்னை: குமரி நீண்டகரை அருகே மதில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Chief Minister's condolences to the victims of the collapse of the wall!

author img

By

Published : Aug 10, 2020, 10:18 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”கன்னியாகுமரி மாவட்டம் நீண்டகரை கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று கடல் சீற்றத்தின் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

இதில் மரியதாஸ் என்பவருடைய வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்து, அவருடைய மகன் பிரதீப் அஸ்வின் என்பவர் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துயரச் சம்பவத்தில் தலிஸ்டன் என்பவரது மகன் செல்வன் லிபின், சிலுவை என்பவரது மகன் செல்வன் விதுல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மேற்கண்ட சம்பவத்தில் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.