ETV Bharat / state

'சொன்னபடியே மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பாதை....முதலமைச்சர் ஸ்டாலின் - latest news

சொன்னபடியே மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக தனி பாதையை அமைத்து விட்டோம் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மெரினா மாற்றுத்திறனாளிகள் பாதை குறித்து முதலமைச்சர் ட்வீட்

author img

By

Published : Nov 28, 2022, 6:57 AM IST

சென்னை: மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று ரசிக்கும் வகையில் நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்பட்டு, 1.09 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பாதையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நம்ம சென்னை செல்ஃபி பாய்ண்டின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், ஒரு மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

இதன் மூலம் மற்றவர்களை போல் மாற்று திறனாளிகளும் கடலின் அருகில் இருந்து மெரினா கடலின் பேரழகை அழகை ரசிக்க முடியும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ”பலரின் கனவு மெய்ப்பட்டுள்ளது” என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • இன்று மெரினா வந்த தங்கை வைஷ்ணவி "Dream Come True" என்கிறார்.

    ஆம்! பலரின் கனவு மெய்ப்பட்டுள்ளது.

    சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம்.

    உங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன்! https://t.co/WmV0ZbweYr pic.twitter.com/oW9OVM29BB

    — M.K.Stalin (@mkstalin) November 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இன்று மெரினா வந்த தங்கை வைஷ்ணவி "Dream Come True" என்கிறார். ஆம்! பலரின் கனவு மெய்ப்பட்டுள்ளது. சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம். உங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு மோதிரம், ரத்த வங்கி என களைகட்டிய உதயநிதி பிறந்தநாள் விழா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.